Rahul Gandhi: `வெள்ளை டி-ஷர்ட் அரசியல்... ராகுலின் போக்கே மாறிவிட்டது!' - ஸ்மிருதி இரானி ஓப்பன் டாக் | Rahul makes calculated moves to target specific demographics says Smiruthi irani
2014-ல் ராகுல் காந்தியை எதிர்த்து அமேதி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிட்டதிலிருந்து ராகுல் காந்திக்கும் ஸ்மிருதி இரானிக்கும் நேரடி வார்த்தை மோதல் தொடங்கியது. அப்போதிலிருந்து ராகுல் காந்திக்கும் – ஸ்மிருதி இரானிக்கும் தொடர்ந்து வரும் மோதல், அரசியல் வட்டாரத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமேதி தொகுதியில் தோல்வியை தழுவிய ஸ்மிருதி இரானி ஊடக வெளிச்சத்திலிருந்தும் காணாமல் போனார். இந்த நிலையில், சமீபத்தில் ஒரு தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்திருக்கிறார்.
அதில், “ராகுல் காந்தி குறிப்பிட்ட மக்களை நோக்கி, திட்டமிட்டு தெளிவாக அரசியல் செய்கிறார். அவர் நடைபயணம் மேற்கொண்டபோது, கோயில்களுக்குச் சென்று வழிபட்டார். ஆனால், அதை மக்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அவர் ஏமாற்றுகிறார் என்பதை உணர்ந்தார்கள். அதே நேரம் ராகுல் காந்தி, இந்த அரசியல் போக்கு வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்து, அவரின் அரசியலை வேறு மாதிரியாக மாற்றிக்கொண்டார். சாதி குறித்து நாடாளுமன்றத்தில் பேசும்போது, அவர் வெள்ளை டி-ஷர்ட் அணிந்திருந்தார். அது எந்த மாதிரியான செய்தியாக இளைஞர்களிடம் சென்று சேரும் என்பது அவருக்கு நன்றாக புரிந்திருக்கிறது.