ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம் வழங்ககோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் கபீர்தாஸ் தலைமை தாங்கினார், துணை தலைவர் லோகநாதன் வரவேற்றார், செயலாளர் ஆறுமுகம் கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் வருவாய் துறையில் பணிபுரயும் கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் ரூ.15,700 வழங்கிட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல கிராம உதவியாளர்களுக்கு பொங்கல் போனஸ் சதவீத அடிப்படையில் குறைந்த பட்சம் ரூ.3,000 வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ரகு, சரவணராஜ், ரவி மற்றும் ஆற்காடு, கலவை, வாலாஜா, நெமிலி, அரக்கோணம், சோளிங்கர் தாலுக்கா தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் உறுப்பினர்கள் என 70க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
-ஆர்.ஜே.சுரேஷ்குமார்