சிவசங்கர் பாபா மீதான வழக்கு ரத்து... பின்னணி என்ன?

சென்னை:

சென்னை  கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் கூறப்பட்டது. இதனையடுத்து அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 10 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பாலியல் தொல்லை என்பது தீவிரமான குற்றமாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர் உடனடியாக புகார் அளிக்கவில்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆன காலதாமதத்தை ஏற்கக்கூடிய எந்த மனுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில் சட்டப்படி இந்த வழக்கை விசாரிக்க தடை இருப்பதால் இந்த வழக்கை ரத்து செய்வதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Previous Post Next Post

Post Ads 1

 

Post Ads 2

 
 

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!