ஆடு திருடியவருக்கு அரசு வழக்கறிஞர் பதவி? - விஜய் ஆட்சியில் இப்படியா? தவெக அரசுக்கு புதிய தலைவலி

ஆடு திருடியவருக்கு அரசு வழக்கறிஞர் பதவி? - விஜய் ஆட்சியில் இப்படியா? தவெக அரசுக்கு புதிய தலைவலி
News Image

ஆடு திருடிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞருக்கு தவெக ஆட்சியில் அரசு வழக்கறிஞர் பதவி வழங்கப்பட்டது குறித்து ஆதாரம் இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் வனத்துறை அமைச்சர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் தொடர்பாக அனைத்து துறை அரசுத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து மாற்று திறனாளிகள் 12 பேருக்கு  ரூ.12,88,200 மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட நியோ போல்ட் வாகனங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

அதன் பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார், “திருப்பத்தூர் மாவட்டத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் யானைகள் வருவதன் காரணமாக விவசாய நிலத்திற்கு செல்லாமல் இருக்க ஆட்டோமேட்டிக் மின்வேளி அமைக்கப்பட்டுள்ளது. அந்த மின்வெளியில் எந்த நேரமும் மின்சாரம் பாயாது யானை தொட்டால் மட்டுமே மின்சாரம் பாயும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. அய்யன் கொள்ளை பகுதியில் 45 ஆண்டு காலமாக வட துரைக்கு சொந்தமான இடத்தில் மின்சாரம் இல்லாமல் வாழ்ந்து வரும் பொது மக்களுடைய செய்தியை நான் கேள்விப்படவில்லை. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்” என்று உறுதியளித்தார்.

அதன் பின்பு, கடந்த 2025 ஆம் ஆண்டு வாணியம்பாடி பகுதியில் உள்ள ஷேக் சுல்தான் என்ற வழக்கறிஞர் ஆடு திருடியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவருக்கு தற்போது திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக போஸ்டிங் கிடைத்துள்ளது. அதுகுறித்து செய்தியாளர் ஒருவர், தமிழக வெற்றி கழக ஆட்சியில் மாவட்ட செயலாளர் பணம் பெற்றுக்கொண்டு, அவரின் பரிந்துரையின் பேரில் ஆடு திருட்டு வழக்கில் உள்ள வழக்கறிஞருக்கு அரசு வழக்கறிஞர் பதிவு கிடைத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு, ஆதாரமற்ற குற்றச்சாட்டு கண்டிப்பாக நிரூபித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் அரசு தன் கடமையை செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்தார். தொடர்ந்து பேசிய அவர், “எங்க முதல்வர் எங்களிடம் மக்கள் வரிப்பணத்தில் ஒரு ரூபாய் கூட தொடக்கூடாது என சத்தியம் வாங்கி உள்ளார். எனவே இது போல தவறுகள் செய்ய மாட்டோம். மேலும் அமைச்சர் பெயரை பயன்படுத்தி பணம் பறிப்பில் ஈடுபட்டால் புகார் கொடுங்கள் கண்டிப்பாக அவர்கள் சிறை செல்வார்கள்” என உறுதி அளித்தார்.

வாணியம்பாடியில் ஆடு திருடிய வழக்கில் குற்றஞ்சாட்பட்ட வழக்கறிஞர், தவெக ஆட்சியில் திருப்பத்தூர் அரசு உரிமையியல் நீதிமன்ற வழக்கறிஞராக நியமனம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட புதூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த அஞ்சலா கணவனை இழந்து, ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வரும் நிலையில், அஞ்சலா  கடந்த 17.09.2025 அன்று வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில், தான் வளர்த்து வந்த ஆடு காணவில்லையென புகார் அளித்த நிலையில்,  இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தபோது, அம்பலால் தெரு பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஷேக் சுல்தான் என்பவர், திருமலை என்பவருடன் சேர்ந்து, காரில் அஞ்சலாவின் ஆடுகளை திருடிச்சென்றது தெரியவந்தது.  இதுதொடர்பாக வழக்கறிஞர் சுல்தான் மீது, வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்திருக்கும் நிலையில், தற்போது தமிழக வெற்றிக்கழக ஆட்சியில், ஆடு திருடிய வழக்கில்  வழக்கறிஞர் ஷேக் சுல்தான், திருப்பத்தூர் நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில்,  சிவில் வழக்குகள் தொடர்பாக அரசு தரப்பில் வழக்காடுவதற்காக, அரசு உரிமையியல் நீதிமன்ற  வழக்கறிஞராக  நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks